தமிழ்நாடு முழுவதும் ஏப்ரல் 18ஆம் தேதி 38 மக்களவைத் தொகுதிகள் மற்றம் 18 சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் தருமபுரி மக்களவைத் தொகுதி, பாப்பிரெட்டிபட்டி, அரூர் சட்டப்பேரவை இடைத்தேர்தல் தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. பாப்பிரெட்படிபட்டி சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட அய்யம்பட்டி, ஜாலி புதுார், நத்தமேடு பகுதிகளில் அமைந்த 10 வாக்குச்சாவடி மையங்களில் முறைகேடு நடைபெற்றதாக திமுக சார்பில் தருமபுரி மாவட்ட தேர்தல் அலுவலர் மலர்விழியிடம் மனு அளிக்கப்பட்டது.
இந்த மனு தலைமைத் தேர்தல் அலுவலர்களிடமும் வழங்கப்பட்டது. இதன் மீது நடவடிக்கை எடுத்த இந்திய தலைமை தேர்தல் ஆணையம், முறைகேடு நடைபெற்றதாகக் கூறப்பட்ட எட்டு வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டும் என உத்தரவு பிறப்பித்தது. இதைத்தொடர்ந்து தருமபுரி மாவட்டத்தில் எட்டு வாக்குச்சாவடிகளுக்கு மே 19ஆம் தேதி மறு வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் எட்டு வாக்குப்பதிவு மையங்களில் 6 ஆயிரத்து 59 வாக்காளர்கள் உள்ளனர்.
தருமபுரி | வாக்குப்பதிவு நடைபெறும் பகுதிகள் | வாக்குச்சாவடி |