தர்மபுரி: பென்னாகரம் அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து தலைமறைவான நியாய விலை கடை விற்பனையாளர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் பகுதியில் நான்காம் வகுப்பு படிக்கும் 9 வயது சிறுமி புத்தாண்டு தினத்தன்று, உறவினரின் வீட்டிற்கு பூ கொடுக்கச் சென்றுள்ளார். அப்போது அதே பகுதியை சேர்ந்த நியாய விலைக் கடையில் விற்பனையாளராக பணியாற்றி வரும் கணேசன் என்பவர், சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.
சிறுமி பாலியல் தொல்லை கொடுத்த ரேஷன் கடை ஊழியர் கைது - போக்சோ சட்டம்
இந்த புகாரின் பேரில் மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் லதா விசாரணை மேற்கொண்டு, சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து தலைமறைவான கணேசனை பிடித்து விசாரணை நடத்தினார்.
சிறுமி பாலியல் தொல்லை கொடுத்த ரேஷன் கடை ஊழியர் கைது
இது குறித்து சிறுமியின் தாயார் பென்னாகரம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் லதா விசாரணை மேற்கொண்டு, சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து தலைமறைவான கணேசனை பிடித்து விசாரணை நடத்தினார். இதனை தொடர்ந்து சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது தெரியவந்ததையடுத்து, கணேசனை போச்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.