புதிய அரசியல் கட்சியை வரும் ஜனவரி மாதம் தொடங்குவேன் என நடிகர் ரஜினிகாந்த் இன்று அறிவித்தார். இது அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மாநிலம் முழுவதும் உள்ள அவரது மக்கள் மன்ற நிர்வாகிகள், ரசிகர்கள் ஆங்காங்கே மக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடி வருகின்றனர்.
அரசியல் கட்சி அறிவிப்பு! - ரஜினி ரசிகர்கள் வரவேற்பு! - ரஜினி ரசிகர்கள்
தர்மபுரி: அரசியல் கட்சி தொடங்குவதாக ரஜினிகாந்த் அறிவித்திருப்பதற்கு அவரது ரசிகர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து தர்மபுரி மாவட்ட ரஜினி ரசிகர் மன்றத் தலைவர் செந்தில்குமாரிடம் பேசியபோது, ” ரஜினிகாந்த் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு அரசியல் கட்சி தொடங்குவதாக அறிவித்திருந்தார். அதன்பின்பு, கட்சியில் மாவட்டம், ஒன்றியம் என கட்சியை பலப்படுத்த மூன்று ஆண்டுகள் தேவைப்பட்டன. மேலும், அவரது உடல்நிலை சரியில்லாததால் கட்சி தொடங்குவது தாமதமானது. ஆனால் ரஜினியின் இன்றைய அறிவிப்பு ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது “ என்றார்.
இதையும் படிங்க: ரஜினிக்கு கோடி நன்றிகள்! - அர்ஜூனமூர்த்தி