தருமபுரி நகராட்சிக்கு உட்பட்ட அன்னசாகரம் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் மழைநீர் தேங்கியிருந்தது. இதனால், மாணவர்கள் பள்ளிக்குள் செல்லமுடியாமல் சிரமப்பட்டனர்.
இது குறித்து நேற்று முன்தினம் (அக். 19) ஈடிவி பாரத் செய்தி வெளியிட்டிருந்தது. மழை நீர் தேங்கியிருப்பது குறித்து மாவட்ட ஆட்சியர் மலர்விழியின் கவனத்துக்கும் கொண்டு செல்லப்பட்டது.