தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காவிரி கரையோர பகுதிகளில் மழை: ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிப்பு - Increase of water supply to Oakenakal

தருமபுரி: காவிரி கரையோர பகுதிகளில் பெய்துவரும் மழையின் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 3 ஆயிரத்து 500 கன அடியாக அதிகரித்துள்ளது.

Increase of water supply to Oakenakal

By

Published : Jul 2, 2020, 7:44 PM IST

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி கரையோரப் பகுதிகள் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த மூன்று நாள்களாக விட்டு விட்டு மழை பெய்தது.

காவிரி கரையோர பகுதிகளில் பெய்துவரும் மழையின் காரணமாக ஒகேனக்கல்லுக்கு வரும் நீர்வரத்து 3 நாள்களாக தொடர்ந்து அதிரித்துவருகிறது.

நேற்று ஒகேனக்கல்லுக்கு 3 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இன்று காலை நிலவரப்படி ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 3 ஆயிரத்து 500 கன அடியாக அதிகரித்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details