ETV Bharat Tamil Nadu

தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தருமபுரி அரசுப்பள்ளி வளாகத்தில் மழைநீர் - மாணவ மாணவிகள் அவதி! - Rain water at the Dharumapuri Government School ground issue

தருமபுரி: அன்னசாகரம் அருகே நகராட்சி நடுநிலைப்பள்ளி வளாகத்தில் மழைநீர் குளம்போல் தேங்கி நிற்பதால், அப்பள்ளி மாணவ மாணவிகள் அவதிக்குள்ளாகின்றனர் என பெற்றோர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

Dharumapuri
author img

By

Published : Oct 19, 2019, 11:37 AM IST

தமிழ்நாட்டில் வட கிழக்கு பருவமழை தொடங்கியிருப்பதால் பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்துவருகிறது. அதன்படி, தருமபுரி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக பெய்த கனமழையால் அன்னசாகரம் அருகேயுள்ள நகராட்சி நடுநிலைப்பள்ளி வளாகம் முழுவதும் நீரில் மூழ்கியது.

இதனால் அங்கு பயிலும் 80க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் வகுப்பறைக்குச் செல்வதற்கு தேங்கியுள்ள மழைநீரில் நடந்துச்செல்ல வேண்டியுள்ளது. கடந்த இருவரங்களாக தொடர்ந்துவரும் இந்த நிலையை பார்த்து பெற்றோர்கள், 'டெங்கு கொசு ஒழிப்பிற்கு பல்வேறு நடவடிக்கை எடுக்கும் மாவட்ட நிர்வாகம் இதற்கு கவனம் செலுத்தாமல் இருப்பது வருத்தத்திற்குரியது.

டெங்கு காய்ச்சல் வேகமாக பரவிவரும் நிலையில் இவ்வாறு மெத்தனம் காட்டாமல் விரைந்து மாவட்ட நிர்வாகம் நீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர். மேலும் தருமபுரி மாவட்டம் கம்பைநல்லூர் பகுதியைச் சேர்ந்த ஐந்து வயது பள்ளி மாணவர் ஒருவர் டெங்கு காய்ச்சல் காரணமாக உயிரிழந்துள்ளார் என்பது குறிப்பிட்டத்தக்கது.

அரசுப்பள்ளி வளாகத்தில் மழைநீர்

மேலும் படிங்க: தமிழ்நாட்டில் 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

ABOUT THE AUTHOR

...view details