தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தருமபுரி எம்.பி. கோரிக்கை: மின்னல் வேகத்தில் கழிவறை கட்டுமான பணி - தருமபுரி எம்.பி.

தருமபுரி: திமுக எம்.பி. செந்தில்குமாரின் கோரிக்கையை ஏற்று தருமபுரி ரயில் நிலையத்தின் இரண்டாவது நடைமேடையில் கழிவறை கட்டும் பணிகள் மின்னல் வேகத்தில் நடந்துவருகின்றன.

bathroom
bathroom

By

Published : Dec 16, 2019, 5:38 PM IST

தருமபுரி ரயில் நிலையத்தில் இரண்டாவது நடைமேடையில் கழிவறை வசதி செய்துதர வேண்டும் என ரயில் பயணிகள் தருமபுரி திமுக நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமாருக்கு கோரிக்கைவைத்தனர். பொதுமக்கள், ரயில் பயணிகள் கோரிக்கையை ஏற்று தருமபுரி திமுக எம்.பி. செந்தில்குமார் தென்மேற்கு ரயில்வே பொதுமேலாளரை சந்தித்து மனு கொடுத்திருந்தார்.

கடந்த சில வாரங்களுக்கு முன் மீண்டும் நினைவூட்டல் கடிதம் எழுதியிருந்தார். எம்.பி.யின் கோரிக்கையை ஏற்று தருமபுரி ரயில் நிலையத்தில் இரண்டாம் எண் நடைமேடை பகுதியில் கழிவறை அமைக்க கட்டுமான பணிகள் மிக வேகமாக நடைபெற்றுவருகின்றன.

தருமபுரி எம்.பி. செந்தில்குமார்

கட்டுமான பணிகள் இந்த மாதத்தில் முடிவுபெறும் எனld தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தருமபுரி - சேலம் சாலையில் உள்ள அதியமான்கோட்டை ரயில்வே கேட் மேம்பாலப் பணிகளையும் விரைந்து முடிக்க செந்தில்குமார் கோரிக்கைவிடுத்திருந்தார். அதன்படி அந்தப் பணியும் தற்போது தொடங்கியிருக்கிறது.

ABOUT THE AUTHOR

...view details