தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள சிட்லகாரப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பச்சமுத்து அவரது மகன் சிவசங்கர் (32). இவர் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் தற்காலிக பணியாளராக வேலை பார்த்துவந்தார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் மகள் உள்ளனர். கருத்து வேறுபட காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்துவருகின்றனர்.
இந்த நிலையில் சிவசங்கர் தனது வீட்டு முன்பு உள்ள விறகுகளை அப்புறப்படுத்துமாறு, அவரது பக்கத்துவீட்டுக்காரரான மாசிலாமணியின் மனைவி சஞ்சீவியிடம் கூறி உள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது.
அதன்காரணமாக சஞ்சீவி மீது பாப்பாரப்பட்டி காவல் நிலையத்தில் சிவசங்கர் புகார் அளித்தார். இப்படிப்பட்ட சூழலில், அக். 22ஆம் தேதி இரவு 11 மணி அளவில் உடலில் தீப்பற்றி எரிந்த நிலையில் சஞ்சீவி அவரது வீட்டின் அருகில் கிடந்துள்ளார். அவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு 90 விழுக்காடு தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிவசங்கர் தருமபுரி மகிளா நீதிமன்ற நீதிபதியிடம் மரண வாக்குமூலம் கொடுத்தார். அதில் தனது பக்கத்து வீட்டுக்காரர் சஞ்சீவி (53) மற்றும் அவரது மகள் லட்சுமி பிரியா (32) ஆகிய இருவரும் தன்னை தீ வைத்து கொளுத்தியதாக தெரிவித்தார். அதன்பின் உயிரிழந்தார். அதனடிப்படையில், பாப்பாரப்பட்டி போலீசார் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க:மாமனாரின் கண்முன்னே மனைவியை கத்தியால் குத்திக் கொன்ற மருமகன்..!