தர்மபுரி:அரூர் வருண தீர்த்தம் பகுதியில் எரிவாயு தகன மேடை இயங்கிவருகிறது. இந்நிலையில் அரூர் பகுதியில் கரோனா தொற்று ஏற்பட்டு உயிரிழப்பவர்கள் சடலங்களை எரிவாயு தகன மேடையிலேயே எரியூட்டுகின்றனர்.
அவ்வாறு எரிவாயு தகன மேடையில் எரிக்கப்படும் உடல்கள் முழுவதும் எரிந்து சாம்பலாகும் முன்பே, அங்கு பணிபுரியும் ஊழியர்களால் மயானத்துக்குப் பின்னே தூக்கிவீசப்படுவதாகப் பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
இதனால் அந்த வழியாகச் செல்லும் மக்கள் அச்சத்துடனும், நோய்த்தொற்று ஏற்படும் பயத்துடனும் செல்கின்றனர்.
அரூர் பேரூராட்சி நிர்வாகம் மக்கள் அச்சத்தைப் போக்கும் வகையில் சடலத்தை எரிப்பதற்காக, பயிற்சிப் பெற்ற பணியாளர்களை வைத்து சடலங்களை எரிக்க வேண்டும் எனவும், இறந்தவர்களை உரிய மரியாதையுடன் தகனம் செய்ய வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
இதையும் படிங்க:தமிழ்நாட்டில் இன்று 5, 127 பேருக்கு கரோனா!