தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அடுத்த கோணங்கி அள்ளி ஊராட்சிக்குட்பட்ட ஏறுபள்ளி, அரிச்சந்தரனூர் ஆகிய கிராமங்களில் பல நூறு ஏக்கர் பரப்பளவில் கொய்யா, சப்போட்டா, தென்னை, காட்டுநெல்லி, தேக்கு, நாகமரை உள்ளிட்ட மரங்களை விவசாயிகள் அதிகளவு சாகுபடி செய்து வளர்த்துவந்தனர்.
வறட்சியால் காய்ந்துபோன மரங்கள்! ஒப்பாரி வைத்து போராட்டம்! - Farmers
தருமபுரி: நல்லம்பள்ளி அருகே வறட்சியால் காய்ந்துபோன தென்னை, கொய்யா, சப்போட்டா போன்ற மரங்களுக்கு அரசு உரிய இழப்பீடு வழங்கக் கோரி பாதிக்கப்பட்டுள்ள விவசாய நிலத்தில் பெண்கள் ஒப்பாரி வைத்து அழுது நுாதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
![வறட்சியால் காய்ந்துபோன மரங்கள்! ஒப்பாரி வைத்து போராட்டம்!](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-3488026-thumbnail-3x2-drought.jpg)
இதனால் விரக்தியடைந்த விவசாயிகள் தங்களது குடும்பத்தாருடன் வறட்சியால் காய்ந்து கருகிய கொய்யா உள்ளிட்ட மரங்களுக்கிடையே ஏராளமான பெண்கள் அமர்ந்து தலையில் முக்காடு போட்டும், ஒப்பாரி வைத்தும் நூதன போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டம் அந்தக் கிராம விவசாய குடும்பத்தார் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
சுமார் ஒரு மணி நேர ஒப்பாரிக்குப் பிறகு, இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்காத அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், இழப்பீடு வழங்கிட நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் மாவட்ட நிர்வாகத்திற்கு பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள் நேரில் சென்று கோரிக்கை மனு அளிப்பதாக தெரிவித்தனர்.