தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தருமபுரியில் காற்றில் பறக்கும் ஊரடங்கு உத்தரவு - public crowd in dharmapuri

தருமபுரி: ஊரடங்கு உத்தரவை மதிக்காமல் இளைஞர்கள் இருசக்கர வாகனங்களில் சாகசங்கள் செய்வது தங்களுக்கு வருத்தமளிப்பதாக சமூக செயற்பாட்டாளர்கள் கூறியுள்ளனர்.

public crowd in dharmapuri
public crowd in dharmapuri

By

Published : Apr 4, 2020, 6:10 PM IST

கரோனா தொற்றிலிருந்து மக்கள் தங்களைத் தற்காத்துக்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தியே இந்தியா முழுவதும் தேசிய ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது இதனையடுத்து தருமபுரி நகர்ப் பகுதி, பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் நடமாட்டம் அதிகளவில் உள்ளது. அதேபோல் இருசக்கர வாகனங்களில் இளைஞர்கள் சுற்றித் திரிந்தும் வருகின்றனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு தருமபுரி நகர காவல் துறையினர் இருசக்கர வாகன ஓட்டிகள் மீது தனிக் கவனம் செலுத்தி அறிவுரைகள் வழங்கினர். அதன் காரணமாக கடந்த சில நாள்களாக இளைஞர்கள் இருசக்கர வாகனத்தில் சுற்றித் திரிவது குறைந்திருந்தது.

ஆனால் தற்போது தருமபுரி பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் இருசக்கர வாகனங்களில் இருவர் அல்லது மூன்று இளைஞர்கள் பயணம் செய்து சாகசங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

தேசிய ஊரடங்கு உத்தரவு, சமூக விலகல், கரோனா குறித்த விழிப்புணர்வை மாவட்ட நிர்வாகம் மக்களிடம் வலியுறுத்தி வருகின்றனர். சமூக விலகலைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என அரசு கூறிவருகிறது. ஆனால் இவர்கள் எதையும் பொருட்படுத்தாமல் சுற்றித் திரிந்து வருவதாக சமூக செயற்பாட்டாளர்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details