தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பால் கொள்முதல் செய்யாததற்கு எதிர்ப்பு - பாலை சாலையில் ஊற்றி போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்

தருமபுரி: கரோனாவை காரணம் காட்டி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் பால் கொள்முதல் செய்யாததை கண்டித்து விவசாயிகள் பாலை சாலையில் ஊற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கொள்முதல் செய்யாததை கண்டித்து பாலை சாலையில் ஊற்றி போராட்டம்
கொள்முதல் செய்யாததை கண்டித்து பாலை சாலையில் ஊற்றி போராட்டம்

By

Published : Jun 15, 2021, 7:52 PM IST

தருமபுரி மாவட்டம் மொரப்பூர் அருகே தொங்கனூர் கிராமத்தில் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கம் செயல்பட்டு வருகிறது. இங்கு 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் காலை, மாலை என இருவேளைகளிலும் 3 ஆயிரம் லிட்டர் பால் ஊற்றி வருகின்றனர்.

இந்நிலையில் கரோனா ஊரடங்கு காலத்தில் பால் உற்பத்தியாளர்களிடமிருந்து குறைந்த அளவிலான பால் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. தற்போது விவசாயிகள் கொண்டு வரும் ஒரு லிட்டர் பாலில், அரை லிட்டர் மட்டுமே கொள்முதல் கூட்டுறவு சங்கத்தில் செய்யப்படுகிறது.

இதுதொடர்பாக அதிகாரிகளிடம் கேட்டதற்கு முழு பாலையும் கொள்முதல் செய்ய இயலாது என தெரிவித்துள்ளனர்.

பாலை சாலையில் ஊற்றி போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்

இதனால் ஆத்திரம் அடைந்த விவசாயிகள், சுமார் 500 லிட்டர் பாலை சாலையில் ஊற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கருதி முழு பாலையும் அரசு கொள்முதல் செய்ய வேண்டும் என்றும், அதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details