தர்மபுரி:பென்னாகரம் அடுத்த கே.அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்தவர் கருப்பண்ணன் என்பவரின் மகன் வினோத் (30). இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவர் ஏரியூர் பிடிஒ அலுவலகத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் வினோத்தின் தந்தை கருப்பண்ணனுக்கும் அவருடைய சகோதரர் குடும்பத்திற்கும் நீண்ட நாட்களாக பூர்வீக சொத்து பிரிப்பதில் பிரச்சனை இருந்து வருகிறது.
வினோத்துக்கு சேர வேண்டிய பங்கு முறையாக அளவிட்டு பிரித்து தராததால், வினோத் ஒகேனக்கல் காவல் நிலையத்தில் பலமுறை புகார் அளித்துள்ளார். ஆனால், புகாரின் மீது எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை எனக் கூறி வினோத், இன்று (ஜூன் 30) கே.அக்ரஹாரம் கிராமத்தில் உள்ள டிரான்ஸ்பாரத்தில், மின்சாரத்தை அவரே துண்டித்து விட்டு மேலே ஏறி அமர்ந்து கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டார்.