தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பள்ளி மாணவியை கடத்திய தனியார் பள்ளி ஆசிரியர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது! - மாணவியை கடத்திய தனியார் பள்ளி ஆசிரியர் கைது

தருமபுரி: பள்ளி மாணவியை கடத்திய தனியார் பள்ளி ஆசிரியரை போக்சோ சட்டத்தின் கீழ் காவல் துறையினர் கைது செய்தனர்.

போக்சோ சட்டத்தின் கீழ் கைது
போக்சோ சட்டத்தின் கீழ் கைது

By

Published : Jan 3, 2021, 2:52 PM IST

தருமபுரி மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் ஒருவர், அதே பள்ளியில் பயின்ற மாணவியை கடந்த நவம்பர் மாதம் கடத்தி சென்றார்.

பள்ளிக்குப் சென்ற மகள் வீடு திரும்பாததால், அதிர்ச்சியடைந்த பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

தொடர்ந்து தனது மகளை ஆசிரியர் ஒருவர் கடத்தி சென்று இருக்கலாம் எனக் காவல் துறையினரிடம் தெரிவித்துள்ளனர்.

அந்த ஆசிரியர் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தினர். அதில் ஆசிரியர், மாணவியை கடத்திச் சென்று ஈரோட்டில் தங்கியிருந்தது தெரியவந்தது.

இதையறிந்து ஈரோடு விரைந்த காவல் துறையினர், மாணவியை மீட்டனர். தனியார் பள்ளி ஆசிரியரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

இதையும் படிங்க:5 வயது குழந்தையை இருசக்கர வாகனம் இயக்க அனுமதித்த தந்தையின் ஓட்டுநர் உரிமம் ரத்து!

ABOUT THE AUTHOR

...view details