தருமபுரி: ஏரி அருகே மருத்துவக்கழிவுகளைக் கொட்டும் தனியார் மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
இம்மாவட்ட நகரப்பகுதியில், 100-க்கும் மேற்பட்ட தனியார் மருத்துவமனைகள், கிளினிக்குகள் உள்ளன. தனியார் மருத்துவமனைகள் பயன்படுத்திய ஊசிகள், மருந்துகள், ரத்தக்கரை படிந்த பஞ்சுகள் உள்ளிட்ட மருத்துவக்கழிவுகள், கரோனா தொற்று நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும்போது மருத்துவர்கள் பயன்படுத்திய கவச உடைகள் என இவை அனைத்தும், தருமபுரி நகரப்பகுதியை ஒட்டியுள்ள ராமக்காள் ஏரியின் அருகே இந்து சமய அறநிலைத் துறைக்குச் சொந்தமான இடத்தில் இரவு நேரங்களில் வீசிவிட்டு செல்லப்படுகிறது.
அங்கு வீசப்பட்ட மருத்துவக் கழிவுகள் மலைபோல் குவிந்துள்ளதால் அப்பகுதியில் ஒருவிதமான துர்நாற்றம் வீசிவருகிறது. மேலும் தொற்று நோய்ப் பரவும் வாய்ப்பு இருப்பதாக அப்பகுதியில் குடியிருக்கும் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.