தருமபுரியிலிருந்து மேச்சேரி நோக்கி சென்ற தனியார் கல்லூரி பேருந்து தொப்பூர் அருகே லாரி பின்பகுதியில் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த மாணவ, மாணவிகள் மற்றும் பேராசிரியை உட்பட 10 பேர் பலத்த காயமடைந்துள்ளனர்.
விபத்தில் காயமடைந்த செளமியா, ஸ்ரீவித்யா, சௌந்தர்யா, சௌமியா மகேஷ்வரி, பிரபாகுமார், யோகேஷ், ஸ்ரீகாந்த், கவியரசு, பேராசிரியை புவனேஷ்வரி உள்ளிட்டோர் தொப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்த மாணவ, மாணவிகள் நல்லம்பள்ளி அடுத்த சிவாடி பகுதியைச் சேர்ந்தவர்களாவர்.