தருமபுரி: மாரண்டஹள்ளியில் இருந்து சேலம் நோக்கிச் சென்று கொண்டிருந்த தனியார் பேருந்தை குள்ளனூரை சேர்ந்த ரவி (49) என்பவர் ஓட்டி சென்றார். பேருந்து கோடியூர் அருகே சென்றுக் கொண்டிருந்த போது, அதே பகுதியை சேர்ந்த திருப்பதி (27) என்பவர் இருசக்கர வாகனத்தில் எதிர் திசையில் வந்துக் கொண்டிருந்தார்.அவர் மீது மோதாமல் இருக்கப் பேருந்து ஓட்டுநர் திடீரென பிரேக் போட்டுள்ளார்.
தருமபுரி அருகே தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்து! - விபத்துக்குள்ளான தனியார் பேருந்து
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே பிரேக் பிடிக்காததால் கட்டுப்பாட்டை இழந்த தனியார் பேருந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துள்ளானது.
விபத்துக்குள்ளான தனியார் பேருந்து
அப்போது கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, சாலையோரம் உள்ள பனை மரத்தில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. விபத்தில் பேருந்தில் பயணம் செய்த மாரண்டஹள்ளியை சேர்ந்த சாந்தி (31), பரமேஸ்வரி (35) மற்றும் கோடியரைச் சேர்ந்த (27) ஆகியோர் பலத்த காயமடைந்தனர். மேலும் 10க்கும் மேற்பட்டோருக்கு லேசான காயம் ஏற்பட்டது. காயமடைந்தவர்கள் பாலக்கோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதையும் படிங்க:அரும்பாக்கம் அருகே விபத்து - இளம்பெண் உட்பட இருவர் பலி