தருமபுரி மாவட்டத்தில் பொதுமக்களிடம் வழிப்பறியில் ஈடுபட்டுவந்த வினோத் என்பவரை கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு காவல் துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது அவரிடம் நிதிபதி விசாரணை நடத்தினர். அப்போது அவர் நீதிபதி கேட்ட கேள்விக்கு சோர்வாக பதிலளித்தார். இதையறிந்த நீதிபதி கைதி வினோத்தை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்குமாறு உத்தரவிட்டார்.
இதையடுத்து காவல் துறையினர் வினோத்தை சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் இரண்டு நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டும் என தெரிவித்ததையடுத்து, காவல் துறையினர் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்றுவந்துள்ளார். இந்நிலையில் இன்று அதிகாலை அவர் அங்கிருந்து தப்பிச் சென்றார்.