உலகமே கொண்டாடும் முக்கிய தினங்களில் ஆங்கில புத்தாண்டும் ஒன்று. இந்நிலையில் 2020ஆம் ஆண்டை வரவேற்கும் விதமாக இன்று நள்ளிரவு இளைஞா்கள் கேக் வெட்டி கொண்டாடி மகிழ்வர்.
இந்த புத்தாண்டு கொண்டாட்டத்தில் கேக் தேவை அதிகம் உள்ளதால் அதனுடைய தயாரிப்பு பணிகளும் தருமபுரியில் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. சென்ற ஆண்டைவிட தற்போது அதிகளவு கேக் வாங்க மக்கள் முன் பதிவு செய்துள்ளதாக விற்பனையாளா்கள் தெரிவிக்கின்றனா்.
புத்தாண்டை முன்னிட்டு தருமபுரியில் கேக் தயாரிப்பு நடப்பாண்டு புதுவரவாக தற்போது குழந்தைகளை ஈா்க்கும் மோட்டு, பத்லு, சோட்டாபீம் உருவம் பதித்த கேக்குகள் தயாரிப்பு மட்டுமில்லாமல் 200-க்கும் மேற்பட்ட எண்ணற்ற வண்ண நிறங்களில் வெண்ணிலா, சாக்லேட், ப்ளம் கேக், ரிச் ப்ளம் கேக், ஃப்ருட் கேக், ஹனி கேக், ஐஸ் கேக், கார்ட்டூன் கேக் என பலவிதமான ரகங்களில் கேக் தயாரிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:
ஆதித்யா அருணாச்சலத்தின் 'தர்பார்' - புகைப்படத் தொகுப்பு