தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அரூர் அருகே கர்ப்பிணி தற்கொலை? - அரூர் அருகே கர்ப்பிணிப் பெண் தற்கொலை

தருமபுரி: அரூர் அருகே கர்ப்பிணி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக எழுந்த புகாரையடுத்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டுவருகிறது.

Pregnant woman commits suicide near Arur
Pregnant woman commits suicide near Arur

By

Published : Dec 8, 2020, 2:11 PM IST

தருமபுரி மாவட்டம் அரூர் அடுத்த சாமியான்குட்டை, கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜசேகர். இவர் பென்னாகரம் அடுத்த சின்னம்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த சந்தியாவைக் காதலித்து கடந்த ஒன்பது மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டார்.

முன்னதாக சந்தியா மூன்று மாதம் கர்ப்பமாக இருந்த பொழுது இவருடைய கணவர் குடித்துவிட்டு தாக்கியதில் அவரது கர்ப்பம் கலைந்தது. தற்போது மீண்டும் அவர் நான்கு மாதம் கர்ப்பமாகியுள்ளார். இந்த நிலையில் தொடா்ந்து ராஜசேகர், குடித்துவிட்டு அடித்து துன்புறுத்தியதால் அவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதாகத் தெரிகிறது.

இது குறித்து சந்தியாவின் தாயாரிடம் கேட்கும்போது, "என்னிடம் கடைசியாகப் பேசியபோது நலமுடன்தான் இருக்கிறேன் என்று தெரிவித்தார்.

நான் திரும்பவும் உங்களிடமே வந்துவிடுகிறேன் என்று கூறி வேதனையடைந்தார். பின்னர் ராஜசேகர், சந்தியாவின் சகோதரிக்கு போன்செய்து, சந்தியா தூக்கிட்டு இறந்துவிட்டார். நீங்கள் சென்று பாருங்கள் என்று கூறிவிட்டு போனை ஆப் செய்துள்ளார்.

உயிரிழந்த பெண்

இதனையறிந்து, சந்தியாவின் வீட்டிற்குச் சென்று பார்க்கும்போது அவர் அருகில் நாயைத் தவிர யாரும் இல்லை. இது எனக்கு மனவேதனையாக இருக்கிறது. சந்தியாவின் மரணம் திட்டமிட்டுசெய்த கொலை" என்றார்.

இதையடுத்து, சடலத்தைக் கைப்பற்றிய காவல் துறையினர், அரூர் அரசு மருத்துவமனையில் உடற்கூராய்விற்காக அனுப்பிவைத்தனர். பின்னர் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் இது கொலையா, தற்கொலையா என்ற கோணத்தில் விசாரித்துவருகின்றனர்.

இதையும் படிங்க:இளம்பெண் தற்கொலை: திருமணம் செய்ய வற்புறுத்திய ராணுவ வீரர் கைது!

ABOUT THE AUTHOR

...view details