தருமபுரி கல்லூரியில் பிஎஸ்சி முதலாமாண்டு படித்து வரும் கல்லூரி மாணவியை, தொப்பூர் அடுத்துள்ள ஜருகு பகுதியைச் சேர்ந்த பிரதாப் (20) என்பவர் காதலிக்குமாறு தொந்தரவு செய்துள்ளார். மேலும் நேற்று முன்தினம் குமாரசாமிபேட்டை பஸ் நிறுத்தம் அருகே பிரதாப் கத்தியை காட்டி, அப்பெண்ணிடம் காதலிக்குமாறு மிரட்டியுள்ளார்.
'காதலிக்கலைனா கொன்னுருவேன்' - கத்தியைக் காட்டி மிரட்டியவர் மீது பாய்ந்த போக்சோ! - காதலிக்குமாறு தொந்தரவு
தருமபுரி : பிஎஸ்சி முதலாமாண்டு படித்து வரும் கல்லூரி மாணவியை, பிரதாப் என்ற இளைஞர் காதலிக்குமாறு கத்தியை காட்டி மிரட்டியுள்ளார். இதனால் அவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
posco-arrest-in-dharmapuri
இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை தருமபுரி காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து தருமபுரி காவல்துறையினர் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து பிரதாப்பை கைது செய்துள்ளனர்.
இதையும் படிங்க : சிறுமிக்கு பாலியல் தொல்லை - கோவில் பூசாரிக்கு போக்ஸோ!