தருமபுரி: தருமபுரி மாவட்ட - மத்திய கூட்டுறவு வங்கிக்கு நபார்டு உதவியுடன் நடமாடும் மைக்ரோ ஏடிஎம் வாகனம் வழங்கப்பட்டுள்ளது. நடமாடும் ஏடிஎம் வாகனத்தை தமிழக வேளாண் மற்றும் உழவர் நலன் துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார்.
நடமாடும் வாகனத்தில் ஏடிஎம் இயந்திரம் மைக்ரோ ஏடிஎம் மற்றும் வங்கி சேவைகளை பயன்படுத்திக் கொள்ளும் வகையில் உதவி மேலாளர் மற்றும் உதவியாளர் என பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர் .
பொதுமக்கள் வங்கி சார்ந்த அனைத்து வசதிகளையும் பெரும் வகையில் வாகனம் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஏடிஎம் வாகனத்தில் பொதுமக்கள் தங்கள் தேவைக்கு ஏற்ப பணத்தை டெபாசிட் செய்யவும் வங்கிக் கணக்கிலிருந்து பணத்தைப் பெறவும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 43 கிளைகள் மூலம் வங்கி சேவை வழங்கப்பட உள்ளது.
பணம் எடுத்தல், பணப்பரிமாற்றம், பணம் செலுத்துதல் போன்ற பணிகள் நடைபெறுவதால் மினி வங்கி ஆகவே இந்த வாகனம் செயல்பட உள்ளது. தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வங்கிகளுக்குச்செல்ல வேண்டுமென்றால் பொதுமக்கள் 30 முதல் 40 கிலோமீட்டர் தூரம் பயணம் செய்து வங்கி சேவையை பெற வேண்டிய சூழ்நிலை உள்ளது.
இத்தகைய வங்கி சேவைகள் மற்றும் ஏடிஎம் வசதி இல்லாத கிராமங்களுக்கு இவ்வாகனத்தின் மூலம் வங்கி சேவை வழங்கப்பட உள்ளது. வாரச்சந்தை மற்றும் மக்கள் அதிகமாக கூடும் இடங்களுக்கு சேவையாற்றவும் வங்கி இல்லாத ஊர்களில் பொதுமக்கள் பயன்படுத்த கோரிக்கை விடுத்தால், உடனடியாக அவர்கள் கோரிக்கையை ஏற்று அந்த ஊருக்கு வாகனத்தின் மூலம் சென்று சேவையாற்ற உள்ளதாகவும் கூட்டுறவுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்திலேயே மற்ற எந்த வங்கிகளிலும் இல்லாத நடமாடும் ஏடிஎம் வசதி தருமபுரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் தொடங்கப்பட்டுள்ளது. விவசாயிகள் மற்றும் கிராம மக்கள் இடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.
தருமபுரி: கிராம மக்களுக்காக முதன்முறையாக நடமாடும் ஏடிஎம் அறிமுகம்! இதையும் படிங்க: தருமபுரி அருகே கோர விபத்து.. மாணவர்கள் உட்பட 20 பேர் படுகாயம்