தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அரூர் அருகே பொங்கல் அலங்கார பொருள்கள் விற்பனை! - Pongal decorative items

தருமபுரி: அரூர் அருகே வாரச் சந்தையில் கால்நடைகளுக்காக பொங்கல் அலங்கார பொருள்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

கால்நடைகளுக்காக பொங்கல் அலங்கார பொருட்கள் விற்பனை
கால்நடைகளுக்காக பொங்கல் அலங்கார பொருட்கள் விற்பனை

By

Published : Dec 30, 2020, 4:51 PM IST

தருமபுரி மாவட்டம் அரூர் அடுத்த கோபிநாதம்பட்டி கூட்ரோடு அருகே வாரச் சந்தையில் கால்நடைகளுக்கு தேவையான பொருள்கள் விற்பனை செய்யப்படும். இங்கு பசு மாடுகளை அலங்கரிக்க கயிறு உள்ளிட்ட பல்வேறு வகையான பொருள்கள் விற்பனைக்கு வைக்கப்படும்.

இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு தருமபுரியில், பெய்த தொடர் கனழையால் வாரச் சந்தைகளுக்கு விவசாயிகள், வியாபாரிகள் பொதுமக்களின் வருகை குறைந்தது. பொங்கல் பண்டிகைக்கு இன்னும் இரண்டு வாரம் உள்ள நிலையில், இன்றைய வாரச்சந்தையில் கால்நடைகளை வாங்க, விற்க விவசாயிகளின் வருகை அதிகரித்துள்ளது. மேலும் பொங்கலுக்கு மாடுகளை அலங்கரிக்க, புதிய வகைகளில் வண்ண நூல் கயிறுகள், கொம்பு கயிறுகள், திருஷ்டி கயிறு, சங்கு, குஞ்சங்கள், மூக்கனாக்கயிறு, கழுத்தில் அணியும் பலவகை மணிகள், சலங்கைகள், குப்பி, பட்டை சங்கலி, ஜங்கு பட்டை, வண்ணப்பூச்சிகள், கள்ள பூட்டு, வாயபட்டி, சாட்டை ஆகிய அலங்கார பொருள்களை வாரச் சந்தையில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு மழை இல்லாத காரணத்தால் போதிய வருவாய் இல்லாமல் பெரும்பாலான விவசாயிகள் தவித்து வந்தனர். ஆனால், இந்த வருடம் பெய்த கனமழையால், கடந்த ஆண்டை விட விற்பனை மற்றும் வருவாய் அதிகமாக இருக்கும் என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.


இதையும் படிங்க:பொங்கல் பரிசு... மாற்றுத் திறனாளிகள் கூடுதல் தொகை கோர முடியாது - தமிழ்நாடு அரசு

ABOUT THE AUTHOR

...view details