தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பேருந்தில் பெண் குழந்தையை விட்டுச்சென்ற பெண் - சிசிடிவி காட்சி உதவியுடன் போலீஸ் விசாரணை - பேருந்தில் பெண் குழந்தையை விட்டுச் சென்ற பெண்

தர்மபுரி பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த பேருந்தில் பெண் குழந்தையை விட்டுச் சென்ற பெண்ணை காவல் துறையினர் தீவிரமாகத்தேடி வருகின்றனர்.

Etv Bharat குழந்தையை விட்டுச் சென்ற பெண்
Etv Bharat குழந்தையை விட்டுச் சென்ற பெண்

By

Published : Sep 5, 2022, 5:31 PM IST

தர்மபுரி:புறநகர் பேருந்து நிலையத்தில் நேற்றிரவு (செப்.04) சுமார் 7 மணியளவில் கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிகோட்டையில் இருந்து தர்மபுரிக்கு வந்த அரசுப்பேருந்து ஒன்று பயணிகளை ஏற்றிச்செல்லத் தயாராக இருந்தது. அப்போது, பேருந்து இருக்கையில் தனியாக ஒரு பெண் குழந்தை அழுத சத்தம் கேட்டது.

உடனே சக பயணிகள் குழந்தையின் பெற்றோரைத் தேடினர். ஆனால், யாரும் வராத சூழலில் பேருந்து நிலையத்தில் பேருந்துகளுக்கு பயணிகளை அழைத்து வரும் தரகர் பெரியசாமி, உடனடியாக குழந்தையை மீட்டு, தர்மபுரி புறநகர் பேருந்து நிலையத்தில் உள்ள காவல் உதவி மையத்தில் கடை வியாபாரிகள் உதவியுடன் ஒப்படைத்தார்.

பின்னர் தர்மபுரி காவல் ஆய்வாளர் நவாஸ் உத்தரவின்பேரில், பேருந்து நிலையம் முழுவதும் உள்ள கண்காணிப்புக் கேமராக்கள் மூலம் குழந்தையை விட்டுச்சென்ற பெண் எங்கிருந்து வந்தார். குழந்தையை பேருந்தில் விட்டுவிட்டு எங்கு சென்றார் எனத் தீவிரமாகத் தேடினர்.

அதில், பச்சை நிற சுடிதார் அணிந்து வந்த ஒரு பெண் குழந்தையுடன் முன்பக்கமாக பேருந்தில் ஏறி, பின்னர் குழந்தையை பேருந்தில் விட்டுவிட்டு பின்பக்கப் படி வழியாக இறங்கிச்சென்றது தெரியவந்தது. இந்தப்பெண் குழந்தை கடத்தப்பட்ட குழந்தையா? அல்ல தாயே குழந்தையை பேருந்து நிலையத்தில் விட்டுச்சென்றாரா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

குழந்தையை விட்டுச்சென்ற பெண்

இதற்கிடையே பெற்றோரை காணாமல் தொடர்ந்து அழுதுகொண்டு இருந்த குழந்தைக்கு, பேருந்து நிலையத்தில் கடைகள் வைத்திருக்கும் பெண்கள் உடைமாற்றி, பால் மற்றும் உணவு அளித்து தூங்க வைத்தனர்.

இந்நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கலைச்செல்வன் உத்தரவின்பேரில், குழந்தைக்கு முதலுதவி சிகிச்சையளித்து தொப்பூர் அருகேவுள்ள தமிழ்நாடு அரசின் குழந்தைகள் பாதுகாப்பு இல்லத்தில் ஒப்படைக்கப்பட்டு, தற்போது அந்த பெண் குழந்தை பராமரிக்கப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க:திண்டுக்கல்லில் ஹோட்டலுக்குள் புகுந்த அரசு பேருந்து... 2 பேர் உயிரிழப்பு...

ABOUT THE AUTHOR

...view details