தமிழ்நாடு சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் உத்தரவுப்படி, அனைத்து மாவட்டங்களிலும் காவல்துறையினர் மாதிரி அணிவகுப்பு ஊர்வலங்கள் நடைபெற்று வருகிறது.
இன்று தருமபுரி மாவட்ட காவல்துறை சார்பில் சட்டம் ஒழுங்கு பிரச்னையை காவல்துறையினர் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து மாதிரி அணிவகுப்பு ஊர்வலம் நடைபெற்றது.
இந்த ஊர்வலம் வள்ளலார் திடல் பகுதியிலிருந்து தொடங்கி நான்கு ரோடு சந்திப்பு ராமக்காள் ஏரி உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாகச் சென்று நிறைவடைந்தது.
காவல்துறையினரின் மாதிரி அணிவகுப்பு ஊர்வலம் பின்னர் நான்குரோடு பகுதியில் திடீரென சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கட்டுப்படுத்துவது போன்ற செய்முறை பயிற்சி, அசம்பாவிதங்களை கையாளுதல், கலவரங்களை அடக்குவது போன்று காவல்துறையினர் செய்து செய்து காட்டினர்.
இவ்ஊர்வலத்தில் தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட காவல் மற்றும் தீயணைப்புத் துறையினர் கலந்துகொண்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கட்டுப்படுத்துவது போன்ற செய்முறை பயிற்சி இதையும் படிங்க:பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் காவல்துறையினர் அணிவகுப்பு!