தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவேஷ் குமார் இன்று(நவ.4) மாவட்ட தொப்பூர் பகுதி அருகே உள்ள சேலம்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் தொடர் விபத்து ஏற்படும் பகுதிகளை நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது அங்கு விபத்துகள் தொடர்ந்து ஏற்பட காரணம் என்ன? விபத்து ஏற்படாமல் இருக்க காவல் துறை எடுத்துள்ள நடவடிக்கை என்ன? என்பது குறித்து தொப்பூர் காவல் நிலைய, காவல் ஆய்வாளரிடம் கேட்டறிந்தார்.
இதனையடுத்து காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணாபுரம் மதிகோண்பாளையம், காரிமங்கலம், தருமபுரி அனைத்து மகளிர் நிலையம், நகர காவல் நிலையம், அதியமான் கோட்டை காவல் நிலையங்களில் ஆய்வு மேற்கொண்டார்.