தர்மபுரி:பாலக்கோடு தாலூகா மல்லுப்பட்டி அடுத்த வெலகலஹள்ளி கிராமத்தைச்சேர்ந்தவர் ஓய்வு பெற்ற மாவட்ட கல்வி அலுவலர் பன்னீர்செல்வம்(66). இவருக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளநிலையில், இவர் கடந்த 2014ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஓய்வுபெற்றார்.
இந்நிலையில், இவர் தனது குடும்பத்துடன் தனது தம்பி கிருஷ்ணமூர்த்தி மகள் திருமணத்திற்காக கடந்த 6ஆம் தேதி சென்றார். இதனிடையே அவர்களது வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டிருப்பதாக எதிர்வீட்டார் போன் செய்து தெரிவித்ததைக் கேட்டு அதிர்ச்சியடைந்தார்.
தொடர்ந்து வீட்டில் சென்று பார்த்தபோது, பீரோவிலிருந்த காசுமாலை 10 சவரன், சாதா நெக்லஸ் 3 சவரன், கல் வளையல் 4 சவரன், ஆரம் 17 சவரன், கல் நெக்லஸ் 5 சவரன், ஆரம் 12 சவரன் மொத்தம் 51 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது.
பாலக்கோடு அருகே வீட்டில் 51 சவரன் நகைகள் கொள்ளை - போலீசார் விசாரணை இதனையடுத்து, மகேந்திரமங்கலம் காவல் நிலையத்தில் பன்னீர்செல்வம் அளித்தப்புகாரின் பேரில் காவல் ஆய்வாளர் ஜாபர் உசேன் உள்ளிட்ட போலீசார் இன்று (நவ.10) சம்பவ இடத்திற்குச் சென்று ஆய்வு செய்து இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: 10 ரூபாய் காயினுக்கு சுட சுட பிரியாணி.. கோவையில் குவிந்த கூட்டம்!