தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விவசாயி வெட்டிக் கொலை: போலீசார் விசாரணை - தருமபுரி விவசாயி கொலை குறித்து விசாரணை

தருமபுரி: பாலக்கோடு அருகே விவசாயி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விவசாயி வெட்டிக் கொலை
விவசாயி வெட்டிக் கொலை

By

Published : Jul 31, 2020, 8:03 PM IST

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே பனங்காடு பகுதியைச் சேர்ந்தவர் சண்முகம்(47). இவருக்கு மனைவி, இரண்டு மகள், ஒரு மகன் ஆகியோர் உள்ளனர். இவர் சொந்தமாக 20 ஏக்கர் விவசாய நிலம் வைத்துள்ளார்.

அதில் ஐந்து ஏக்கர் நிலத்தை கோவிந்தன் என்பவருக்கு ஒப்பந்தம் அடிப்படையில் வழங்கியுள்ளார்.

இந்நிலையில் அந்த ஐந்து ஏக்கர் விவசாய நிலத்தை கோவிந்தன் தனது பெயரில் மாற்றி முறைகேடு செய்துள்ளார். இதனால் சண்முகம், கோவிந்தன் ஆகியோருக்கிடையே பிரச்னை இருந்து வந்துள்ளது. இதையடுத்து கோவிந்தன் முறைகேடு செய்த நிலத்தை பெங்களூருவைச் சேர்ந்த சண்முகம் என்பவருக்கு விற்பனை செய்துள்ளார்.

ஏற்கனவே சண்முகம், கோவிந்தன் இடையே பிரச்சனை இருந்துவந்த நிலையில் நிலத்தின் உரிமையாளரான சண்முகத்தை, கோவிந்தன் கொலை செய்ய முடிவு செய்துள்ளார்.

அதன்படி வீட்டில் யாரும் இல்லாததை அறிந்த கோவிந்தன் சண்முகத்தை கொடூரமாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார். இதில், படுகாயமடைந்த சண்முகம் துடிதுடிக்க சம்பவயிடத்திலேயே உயிரிழந்தார். இந்தச் சம்பவம் குறித்து பாலக்கோடு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து கோவிந்தனை தீவிரமாக தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: புதுமணப் பெண் தூக்கிட்டு தற்கொலை: போலீசார் விசாரணை!

ABOUT THE AUTHOR

...view details