தர்மபுரி: அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உள்ள பிரேதப் பரிசோதனை கூடத்தில் கடந்த 2 ஆண்டுகளாக உரிமை கோரப்படாத சடலங்கள் இருந்து வருகின்றன. மாவட்ட நிர்வாகத்தினர் அந்த சடலங்களை புதைக்க முடிவு செய்தனர்.
இதனையடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கலைச்செல்வன் உத்தரவின்பேரில் தர்மபுரியில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக பட்டதாரிகள் இணைந்து நடத்தி வரும் "மை தர்மபுரி தன்னார்வலர்" குழுவின் மூலம் ஒரே இடத்தில் நல்லடக்கம் செய்தனர்.