தருமபுரி மாவட்டம் தொப்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பாளையம் புதூர் நாடு என்ற பகுதியில் முட்புதரில் இரண்டு துப்பாக்கிகள் இருப்பதாக அப்பகுதி பொதுமக்கள் தொப்பூர் காவல்நிலையத்திற்கு தகவல் அளித்தனர். பின்னர் தகவலின்பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற தொப்பூர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல்துறையினர், முட்புதரில் கிடந்த இரண்டு துப்பாக்கிகளை பறிமுதல் செய்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முட்புதரில் கிடந்த துப்பாக்கிகள் - காவல்துறை விசாரணை
தருமபுரி: தொப்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பாளையம்புதூர் ஜனங்காடு என்ற பகுதியில் முட்புதரில் இரண்டு துப்பாக்கிகளை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.
அதேசமயம் பாலக்கோடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட எர்ரம்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே சட்டத்துக்கு புறம்பாக மண் கடத்துவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் வந்தது. பாலக்கோடு காவல்துறையினர் அவ்வழியாகச் சென்று டிராக்டரில் மண் கடத்தப்படுவதை கண்டறிந்தனர். பின்னர் காவல்துறையினர் வருவதை பார்த்த டிராக்டர் ஓட்டுநர், டிராக்டரை விட்டு விட்டு ஓட்டம் பிடித்தார். தற்போது பாலக்கோடு காவல்துறையினர் கடத்தலுக்கு பயன்படுத்திய டிராக்டரை பறிமுதல் செய்து டிராக்டரை ஓட்டி வந்த முருகன் என்பவரை தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.