தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஒரு வாரத்தில் மட்டும் கடலில் கலந்து வீணான 9 டிஎம்சி நீர் - ஜி.கே. மணி வேதனை

ஒரு வாரத்தில் மட்டும் ஒன்பது டிஎம்சி நீர் கடலில் கலந்து வீணாகியுள்ளதாக பாமக தலைவர் ஜி.கே. மணி வேதனை தெரிவித்துள்ளார்.

ஒரு வாரத்தில் மட்டும் 9 டிஎம்சி தண்ணீர் வீணாக கடலில் கலந்துள்ளது
ஒரு வாரத்தில் மட்டும் 9 டிஎம்சி தண்ணீர் வீணாக கடலில் கலந்துள்ளது

By

Published : Nov 16, 2021, 6:58 AM IST

தருமபுரி:பென்னாகரம் சட்டப்பேரவை உறுப்பினரும், பாமக தலைவர் ஜி.கே. மணி ஒகேனக்கல் பகுதியில் ஆய்வுசெய்தார்.

அப்போது செய்தியாளரைச் சந்தித்த அவர், ”வெள்ளப்பெருக்கில் ஒகேனக்கல்லில் நீர் ஆர்ப்பரித்துக் கொட்டிவருகிறது. காவிரி ஆற்றில் வருகின்ற நீர் ஒகேனக்கல் வழியாக மேட்டூர் அணைக்குச் சென்றடைகிறது. பிலிகுண்டு பகுதியில் நேற்று (நவம்பர் 15) 47 ஆயிரம் கன அடி நீர் அளவிடப்பட்டுள்ளது.

இங்கிருந்து செல்லும் நீர் மேட்டூர் அணைக்குச் செல்கிறது மேட்டூர் அணை நீர்மட்டம் 120 அடியாக உள்ளது. மேட்டூர் அணையிலிருந்து 45 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. நீர் வீணாகக் கடலில் கலக்கிறது.

ஒரு வார காலத்தில் மட்டும் ஒன்பது டிஎம்சி நீர் கடலில் கலந்துள்ளது. கடலுக்கு வீணாகச் செல்லும் உபரி நீரை தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஏரிகளுக்கும் நீரேற்றுத் திட்டத்தைச் செயல்படுத்தி நிறைவேற்ற வேண்டும் எனத் தமிழ்நாடு முதலமைச்சரிடம் ஒகேனக்கல் உபரி நீர்த் திட்டத்தைச் செயல்படுத்த கோரிக்கைவைத்துள்ளோம்" என்றார்.

இதையும் படிங்க: HR&CE Department: புதிய கல்லூரிகளைத் தொடங்கக் கூடாது - உயர் நீதிமன்றம் உத்தரவு

ABOUT THE AUTHOR

...view details