தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காவிரி உபரி நீர்திட்டத்தை உடனடியாக செயல்படுத்துக - ஜி.கே.மணி வலியுறுத்தல் - gk mani

தர்மபுரி மாவட்டத்தின் கனவு திட்டமான காவிரி உபரிநீர்திட்டம் செயல்படுத்தி மாவட்டத்தில் உள்ள ஏரி குளங்களுக்கு நீர் நிரப்பும் திட்டம் செயல்படுத்த முதலமைச்சருக்கு தொடர்ந்து கோரிக்கை வைத்து வருவதாக பாமக தலைவர் ஜி.கே.மணி தெரிவித்துள்ளார்.

பாமக தலைவரும் பென்னாகரம் சட்டபேரவை உறுப்பினருமான ஜி.கே.மணி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
பாமக தலைவரும் பென்னாகரம் சட்டபேரவை உறுப்பினருமான ஜி.கே.மணி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

By

Published : Oct 25, 2021, 10:36 PM IST

தர்மபுரி:தர்மபுரி சட்டமன்ற உறுப்பினா் அலுவலகத்தை பாமக தலைவர் ஜி.கே.மணி திறந்து வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ’தர்மபுரி மற்றும் பென்னாகரம் சட்டமன்ற தொகுதிகளில் பாமக சார்பில் போடாடியிட்டு வெற்றி பெற்றுள்ளோம். தொடர்ந்து தர்மபுரி மாவட்ட மக்களுக்காகவும் மாவட்டத்தின் வளர்ச்சிக்காகவும் குரல் கொடுப்போம்.

தர்மபுரி மாவட்டத்தின் கனவு திட்டமான காவிரி உபரிநீர்திட்டம் செயல்படுத்தி மாவட்டத்தில் உள்ள ஏரி குளங்களுக்கு நீர் நிரப்பும் திட்டம் செயல்படுத்த முதலமைச்சருக்கு தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறோம்.

வளர்ச்சி திட்டங்களுக்கு தொடர்ந்து குரல் கொடுப்போம்

தென்பெண்ணை ஆற்றில் தொடர்ந்து உபரி நீர் வீணாகி செல்கிறது. இதனை உடனடியாக முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்வோம். தர்மபுரி மொரப்பூர் ரயில்பாதை திட்டம் அன்றைய மக்களவை உறுப்பினராக இருந்த அன்புமணி ராமதாஸ் பல்வேறு முயற்சிகள் செய்து தொடங்கி வைத்து நிதி ஒதுக்கீடும் செய்தார்.


அந்த திட்டம் நிறைவேற தொடர்ந்து ஒன்றிய அரசிடமும், அலுவலர்களிடமும் வலியுறுத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் தொடர்ந்து பாமகவினர் மீது தாக்குதல்களும், பொய்வழக்குகளும் போடப்பட்டு வருவது வேதனையளிக்கிறது’ என்றார்.

இதையும் படிங்க:தனி நீதிபதியின் கருத்துகள் என்னை புண்படுத்தின - நடிகர் விஜய்

ABOUT THE AUTHOR

...view details