பென்னாகரம் சட்டப்பேரவைத் தொகுதியில் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் போட்டியிடும் அக்கட்சியின் மாநில தலைவர் ஜி.கே. மணி தனது சொந்த கிராமமான அஜ்ஜின அள்ளி கிராமத்தில் அரசு பள்ளியில் வரிசை நின்று தனது வாக்கைப் பதிவு செய்தார்.
அதிமுக ஆட்சி அமைக்கும் - பாமக தலைவா் ஜி.கே. மணி! - அதிமுக கூட்டணியல் பாமக
தர்மபுரி: அதிமுக கூட்டணி வெற்றி பெற்று மீண்டும் அதிமுக ஆட்சி அமையும் என்று பென்னாகரம் தொகுதியில் வாக்களித்துவிட்டு செய்தியாளர்களைச் சந்தித்த பாமக கட்சியின் மாநில தலைவர் ஜி.கே. மணி தெரிவித்தார்.
GK MANI
அதன் பின் செய்தியாளர்களைச் சந்தித்த ஜி.கே. மணி, ”பென்னாகரம் தொகுதியில் தனக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது அதிமுக பாமக கூட்டணி மக்களிடம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஐந்து சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி வெற்றி பெறும். மீண்டும் அதிமுக ஆட்சி அமையும்” என்றார்.