தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

‘தமிழ்நாட்டில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம்’ - ஜி.கே. மணி - பாமக தருமபுரி மாவட்ட பொதுக்குழு கூட்டம்

சென்னை: ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதற்கு அவருக்கு உரிமையுண்டு என்றும் தமிழ்நாட்டில் யார் வேண்டுமானாலும் அரசியிலுக்கு வரலாம் எனவும் பாமக தலைவர் ஜி.கே. மணி தெரிவித்துள்ளார்.

pmk g k mani

By

Published : Nov 12, 2019, 6:00 PM IST

பாட்டாளி மக்கள் கட்சியின் தருமபுரி மாவட்ட பொதுக்குழுக் கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட பாமக தலைவர் ஜி.கே. மணி உள்ளாட்சித் தேர்தல் குறித்து விவாதித்தார். இதன்பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ‘தருமபுரி மாவட்டத்தில் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம் முழுமையாக கிராமங்களுக்கு குடிநீர் சென்றடையவில்லை. மாவட்ட நிர்வாகம் அனைத்துப் பகுதிகளுக்கும் குடிநீர் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்’ என்று தெரிவித்தார்.

ரஜினிகாந்த் தமிழ்நாட்டு அரசியிலில் வெற்றிடம் உள்ளதாகக் கூறியது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், ‘ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது அவரது தனிப்பட்ட விருப்பம். தமிழ்நாட்டில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம்’ என்றார்.

பாமக தலைவர் ஜி.கே. மணி பேச்சு

மேலும் பேசுகையில், ‘தமிழ்நாட்டில் பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டு இந்த உள்ளாட்சித் தேர்தல் முதல்முறையாக நடைபெறவுள்ளது. பெண்கள் அதிக அளவு உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டார்.

இதையும் படிங்க:’திருக்குறளின் அடிப்படை கோட்பாட்டிற்கு எதிராக இந்து மதக்கோட்பாடு இருக்கிறது’ - திருமா

ABOUT THE AUTHOR

...view details