தமிழ்நாடு அரசு ஐந்தாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு இந்தாண்டு முதல் பொதுத்தேர்வு நடத்தப்படும் என அரசு அறிவித்திருந்தது. இந்த பொதுத் தேர்வை ரத்து செய்யக்கோரி பாமக தமிழ்நாடு தழுவிய போராட்டத்தை அறிவித்திருந்தது. பாமகவின் போராட்ட அறிவிப்பைத் தொடர்ந்து தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ராமதாஸை செல்போனில் தொடர்புகொண்டு பேசியதாக தகவல் வெளியாகியது.
இதனைத்தொடர்ந்து பாமக தலைவர் ஜி.கே. மணி சில நாட்களுக்கு முன்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், “செங்கோட்டையன் ராமதாஸை தொடர்புகொண்டு இந்த ஆண்டு தேர்வு தொடங்கிவிட்டது. இந்தச்சூழலில் தேர்வை ரத்து செய்ய முடியாது. அடுத்த ஆண்டு இந்த கோரிக்கை குறித்து பரிசீலிக்கப்படும்” என்று தெரிவித்தாகவும். சூழலைப்புரிந்து கொண்டு பாமக போராட்டத்தை ரத்து செய்தது என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.