தருமபுரி மாவட்டம் பொம்மிடியில் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் பாப்பிரெட்டிபட்டி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட முப்படை உறுப்பினர்களுக்கான சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பாமக இளைஞரணித் தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ், கட்சியினர் மத்தியில் பேசினார்.
அதில், “எனக்கு ஒரு முறை வாய்ப்பு அளித்தால் கல்வி, பொருளாதாரம், விவசாயம், மருத்துவம் உள்ளிட்ட துறைகளில் முன்னேற்றம் கொண்டு வருவேன். உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக கூட்டணியில் தேர்தலை சந்திப்போம். சட்டப்பேரவைத் தேர்தலில் வியூகம் பொருத்து கூட்டணி அமைக்கப்படும்” என தெரிவித்தார்.