தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

‘கல்வி கடன் ரத்து செய்யப்படும்’ - அன்புமணி உறுதி

தருமபுரி: அரூர் பேருந்து நிலையம் எதிரே பேசிய அன்புமணி ராமதாஸ் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுப் பேசும்போது, நிலுவையில் உள்ள நீர் திட்டங்களை நடைமுறைப்படுத்த தமக்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்

அன்புமணி

By

Published : Apr 14, 2019, 7:51 PM IST

தருமபுரி நாடாளுமன்றத் தொகுதி பாமக வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் இன்று அரூர் பகுதியில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அரூர் பேருந்து நிலையம் எதிரே பேசிய அன்புமணி ராமதாஸ், தருமபுரி மாவட்டத்தில் நிலுவையில் உள்ள 14 நீர் திட்டங்களில், ஏழு நீர் திட்டங்கள் நிறைவேற்ற நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் நிலுவையில் உள்ள நீர் திட்டங்களை நடைமுறைப்படுத்த தமக்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

அன்புமணி ராமதாஸ் தேர்தல் பரப்புரை

தொடர்ந்து பேசும் போது, எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் தேர்தல் பரப்புரையில் கல்விக் கடன் ரத்து, நகைக் கடன் ரத்து, விவசாயக் கடன்களைப் பற்றி பேசி வருகிறார். கல்விக்கடன் விவசாயக் கடனை ஆளுங்கட்சி கூட்டணியாக உள்ள தங்கள் கூட்டணியால் மட்டுமே ரத்துசெய்ய முடியும். எதிர்க்கட்சி தலைவராக உள்ள ஸ்டாலினால் எப்படி ரத்து செய்ய முடியும் எனக் கேள்வி எழுப்பி பொதுமக்கள் மத்தியில் வாக்கு சேகரித்தார்.

ABOUT THE AUTHOR

...view details