தர்மபுரி:பென்னாகரம் அருகேயுள்ள நெக்குந்தி பகுதிகளில் விவசாயிகள் அதிகளவு நிலக்கடலை சாகுபடி செய்துள்ளனர்.
நிலக்கடலை சாகுபடியை சேதப்படுத்தும் காட்டுப் பன்றிகள்! - விவசாய செய்திகள்
பென்னாகரம் அருகே நிலக்கடலை செடியை சேதப்படுத்தும் காட்டுப் பன்றிகளால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
தற்போது நிலக்கடலை அறுவடை பருவம் என்பதால் அருகிலிருந்த காடுகளிலிருந்து இரவு நேரத்தில் ஏராளமான காட்டுப் பன்றிகள் நிலக்கடலை மகசூல் செய்த விவசாய வயல்களுக்குள் நுழைந்து சேதப்படுத்திவருகிறது. நேற்று இரவு மாதையன் என்பவருடைய வயலில் சுமார் ஒன்றரை ஏக்கர் நிலக்கடலையைக் காட்டுப் பன்றிகள் சேதப்படுத்தின.
உடனடியாக வனத்துறையினர் விரைந்து செயல்பட்டு, காட்டுப் பன்றிகளைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்து விவசாயத்தைக் காப்பாற்ற வேண்டுமென அப்பகுதி விவசாயிகள் தர்மபுரி மாவட்ட நிர்வாகத்திற்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.