தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த ஏரியூர் பகுதியில் வசிக்கும் மாற்றுத் திறனாளிகள், அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்க மாவட்ட அலுவலர்கள் மறுப்பதாக கூறி ஏரியூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்கள் நலத்திட்ட உதவிகளை வழங்காத அலுவலர்களை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.