தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த ஒகேனக்கல் பகுதியில் கடந்த 18 நாட்களாக தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் குளிக்கவும் பரிசல் இயக்கவும் மாவட்ட நிர்வாகம் தடைவிதித்தது. தற்போது ஒகேனக்கல்லில் நீர் வரத்து குறைந்துள்ளதால் கோத்திக்கல்பாறையிலிருந்து மாமரத்து கால்வாய் வழியாக ஒகேனக்கல் மெயின் அருவியை பார்க்கும் வகையில் பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகமும் அனுமதி வழங்கியுள்ளது .
ஒகேனக்கலில் 18 நாட்களுக்குப் பிறகு பரிசல் இயக்க அனுமதி - ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 12 ஆயிரம் கன அடி
தர்மபுரி: ஒகேனக்கல்லில் 18 நாட்களுக்குப் பிறகு பரிசல் இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.
18 நாட்களுக்குப் பிறகு பரிசல் இயக்க அனுமதி
மேலும் ஒகேனக்கல்லுக்கு வரக்கூடிய நீர்வரத்து 12 ஆயிரம் கன அடியாக இருப்பதாலும், மெயின் அருவிக்கு செல்லும் பாதைகளில் பாதுகாப்பு கம்பிகள் சேதமடைந்ததால் அங்கு குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனால் ஏமாற்றம் அடைந்த சுற்றுலா பயணிகள், ஒகேனக்கல் பகுதியில் சீரமைப்பு பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.