தருமபுரி மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையையொட்டி வெளியூர்களிலிருந்து வரும் பயணிகள், வெளியூர் செல்லும் பயணிகள் வருகையால் நகரப் பேருந்து நிலையம், புறநகர்ப் பேருந்து நிலையம் முழுவதும் பொதுமக்கள் குவிந்து காணப்படுகின்றனர்.
ஆறுமுக ஆசாரித் தெரு, சின்னசாமி நாயுடு தெரு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள துணிக்கடைகளில் துணிகள் வாங்குவதற்கு மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. இதையடுத்து, அங்குள்ள பட்டாசுக் கடைகளில் சிறியவர் முதல் பெரியவர் வரை தங்களுக்குத் தேவையான பட்டாசுகளை மகிழ்ச்சியுடன் வாங்கி வருகின்றனர்.