தர்மபுரி மாவட்டம், அரூர் அருகே கருங்கல்பாடி கிராமத்தில் சுமார் நூறு ஏக்கர் பரப்பளவிலான கோழிப்பண்ணை இயங்கி வருகிறது.
இங்கு சுமார் 5 லட்சம் கோழிகள் வளா்க்கப்பட்டு வருகின்றன. இதில் தினசரி 300க்கும் மேற்பட்ட கோழிகள் உயிரிழக்கின்றன.
உயிரிழக்கும் கோழிகளை தீ வைத்து எரிப்பதால் வரும் துர்நாற்றாத்துடன் கூடிய புகையால் ஆலம்பாடி, கருங்கல்பாடி, மூன்றம்பட்டி, புதூர் உள்பட ஏழு கிராம மக்கள் கடும் துயரத்திற்குள்ளாகி வருகின்றனர்.
கோழிப்பண்ணையால் ஈக்கள் உற்பத்திப் பெருகியுள்ளதால், மக்கள் கடுமையான சுகாதார சீர்கேட்டை அனுபவித்து வருகின்றனர்.
இதனால் கோழிப்பண்ணையை அப்புறப்படுத்தக்கோரி, அரசு அலுவலர்களுக்குப் பலமுறை புகாரளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதன்காரணமாக ஏழு கிராமங்களுக்கும் செல்லக்கூடிய நுழைவுப்பகுதி உட்பட பல்வேறு இடங்களில் கறுப்புக்கொடி கட்டி தேர்தலைப் புறக்கணிப்பதாக மக்கள் அறிவித்துள்ளனர்.
இதையும் படிங்க:கனிமொழிக்கு கரோனா உறுதி