தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தருமபுரி வந்த வந்தே பாரத் ரயில்.. மேலும் ஒரு ரயில் தருமபுரியில் நின்று செல்ல எம்பி செந்தில்குமார் கோரிக்கை! - inaugral function

Coimbatore to Bengaluru Vande Bharat: தருமபுரி ரயில் நிலையத்திற்குச் சென்றடைந்த கோயம்புத்தூர் - பெங்களூர் இடையேயான வந்தே பாரத் ரயிலுக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பளித்தனர்.

தருமபுரி வந்த வந்தே பாரத் ரயிலை மலர்தூவி வரவேற்ற பொதுமக்கள்
தருமபுரி வந்த வந்தே பாரத் ரயிலை மலர்தூவி வரவேற்ற பொதுமக்கள்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 30, 2023, 8:01 PM IST

தருமபுரி வந்த வந்தே பாரத் ரயிலை மலர்தூவி வரவேற்ற பொதுமக்கள்

தருமபுரி: கோவையில் இருந்து பெங்களூர் நோக்கிச் செல்லும் வந்தே பாரத் ரயிலை, பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி வாயிலாக இன்று (டிச.30) துவங்கி வைத்தார். கோவையில் இருந்து புறப்பட்ட வந்தே பாரத் ரயில் திருப்பூர், ஈரோடு, சேலம் வழியாக தருமபுரி ரயில் நிலையத்தை 3.34 மணிக்கு தருமபுரி ரயில் நிலையம் முதல் நடைமேடையில் நின்றது.

தருமபுரி சென்றடைந்த வந்தே பாரத் ரயிலை, தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினரான டி.என்.வி.எஸ் செந்தில்குமார், பாஜக மாவட்டத் தலைவர் பாஸ்கர் உள்ளிட்டோர் வரவேற்றனர். அங்கு கூடி நின்ற பாஜகவினர் மற்றும் பொதுமக்கள், ரயில் மீது மலர்களை தூவி வரவேற்றனர்‌. இதைத் தொடர்ந்து, தருமபுரி ரயில் நிலையத்திலிருந்து ஏராளமான பயணிகள், வந்தே பாரத் ரயிலில் ஓசூருக்கு பயணம் செய்தனர்.

ரயில் நிலையத்திலிருந்து 3.40 மணிக்கு ஓசூர் நோக்கிச் சென்ற ரயிலை, தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் டிஎன்.வி.எஸ். செந்தில்குமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பொதுமக்கள் உற்சாக மிகுதியில் செல்பி எடுத்துக் கொண்டும் ஆரவாரம் செய்தனர்.

நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார் கூறுகையில், "தருமபுரி வழியாக இரண்டு வந்தே பாரத் ரயில் இயக்கப்பட இருப்பதை அறிந்து, மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவை நேரில் சந்தித்தேன். அப்போது, தருமபுரி ரயில் நிலையத்தில் வந்தே பாரத் ரயில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தேன்.

அதன்படி, கோவையில் இருந்து பெங்களூர் நோக்கிச் செல்லும் வந்தே பாரத் ரயிலை, தருமபுரி ரயில் நிலையத்தில் இரண்டு நிமிடம் நின்று செல்ல அனுமதி வழங்கிய அமைச்சருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். பெங்களூரு - மதுரை இடையே செல்லும் வந்தே பாரத் ரயில், தருமபுரி ரயில் நிலையம் வழியாக இயக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளேன். அந்த ரயிலும் தருமபுரியில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை கடிதம் வழங்கி இருக்கிறேன்‌.

தருமபுரி - மொரப்பூர் ரயில் திட்டத்திற்கு 100 கோடி ரூபாய் இந்த ஆண்டு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த தொகையில் நில உரிமையாளர்களுக்கு பணம் கொடுக்கப்பட்டு வருகிறது. இரண்டு பகுதியில் மட்டும் மாற்று வழியாக ரயில் பாதை அமைக்க வேண்டியுள்ளதால், காலதாமதம் ஏற்பட்டுள்ளது. அதனை சரி செய்தால், ரயில் பாதை அமைக்கும் பணி நடைபெறும்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்: மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.. அப்படியென்ன என்ன ஸ்பெஷல்..?

ABOUT THE AUTHOR

...view details