தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பொங்கல் பரிசு தொகுப்பு: அதிகாலை 2 மணியிலிருந்து வரிசையில் காத்திருந்த மக்கள்

தருமபுரி: பென்னாகரம் அருகே நியாய விலை கடை முன்பு அதிகாலை 2 மணியிலிருந்து வரிசையில் நின்ற மக்கள் பொங்கல் பரிசு தொகுப்பை வாங்கி சென்றனர்.

ponngal prize
ponngal prize

By

Published : Jan 4, 2021, 4:26 PM IST

தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் பழனிசாமி அறிவித்த நிலையில், கடந்த 21ஆம் தேதி தொடங்கி வைத்தார். அதன்படி இன்று (ஜன.4) முதல் அனைத்து நியாயவிலை கடைகளில் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம் செய்யப்படுகிறது.

அந்த வகையில் தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே பொங்கல் பரிசு தொகுப்பை பெற நியாயவிலை கடை முன்பு அதிகாலை 2 மணியிலிருந்து பொதுமக்கள் வரிசையில் காத்திருந்தனர். கொட்டும் மழையிலும் கால்கடுக்க காத்திருந்து பொங்கல் பரிசுகளை வாங்கி சென்றனர்.

அதிகாலை 2 மணியிலிருந்து வரிசையில் காத்திருந்த மக்கள்

பொங்கல் பரிசு தொகுப்பு டோக்கன் முறையில் வழங்க அரசு ஆணை பிறப்பித்துள்ளது. நியாயவிலை கடையில் காலையில் 100 நபர்களுக்கும், மாலை 100 நபர்களுக்கும் வழங்கப்பட வேண்டும். ஆனால், பென்னாகரம் நியாய விலை கடையில் அரசின் உத்தரவை பின்பற்றாமல், மக்களுக்கு டோக்கன் முறையாக வழங்காமல், எட்டு மணி நேர காத்திருப்புக்கு பின்பே பரிசு பொருள்கள் கொடுக்கப்பட்டன.

இதையும் படிங்க:அரசுக்குச் செலவு, மக்களுக்கு லாபம்... வேறு எந்த மாற்றமும் நிகழாது - கமல்ஹாசன்

For All Latest Updates

TAGGED:

dharmapuri

ABOUT THE AUTHOR

...view details