தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வயல்வெளியில் திரிந்த 7 அடி மலைப்பாம்பு: வனத்துறையிடம் ஒப்படைத்த பொதுமக்கள்! - மலைப்பாம்பை பிடித்து வனதுத்துறையிடம் ஒப்படைப்பு

தருமபுரி: காரிமங்கலம் அருகே வயல்வெளியில் திரிந்த 7 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பை பொதுமக்கள் பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

வயல்வெளியில் திரிந்த 7 அடி மலைப்பாம்பு: வனதுறையிடம் ஒப்படைத்த  பொதுமக்கள்!
Python caught on agriculture land

By

Published : Oct 29, 2020, 9:12 PM IST

தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அடுத்த முதலிப்பட்டி பகுதியில் விவசாயி முருகேசன் தனது விவசாய நிலத்தில் கேழ்வரகு சாகுபடி செய்திருந்தார். கேழ்வரகு அறுவடையின்போது வயலில் பாம்பு ஊர்வது போல சத்தம் வந்துள்ளது.

வயல் வெளியில் பார்த்தபோது ஏழு அடி நீளமான பாம்பு ஒன்று இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர், முருகேசன் அருகில் இருந்தவர்களுக்கு தகவல் கொடுத்துள்ளார்.

இதனையடுத்து, பொதுமக்கள் ஒன்று திரண்டு சுமார் ஏழு அடி நீளமான பாம்பை பிடித்து வனத் துறையிடம் ஒப்படைத்தனர்.

ABOUT THE AUTHOR

...view details