தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கூட்டம் கூட்டமாக சுற்றித் திரியும் பொதுமக்கள் - காவல் துறையினர் எச்சரிக்கை - தருமபுரி மாவட்ட பொதுமக்கள்

தருமபுரி: ஊரடங்கு உத்தரவை கண்டுகொள்ளாமல் பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக சுற்றி திரிகின்றனர்.

கூட்டம் கூட்டமாக சுற்றித் திரியும் பொதுமக்கள்
கூட்டம் கூட்டமாக சுற்றித் திரியும் பொதுமக்கள்

By

Published : Apr 12, 2020, 1:31 PM IST

கரோனா வைரஸ் தொற்று நாட்டையே அச்சுறுத்தி வருவதால், தமிழ்நாட்டில் தொற்று நோய் பரவாமல் இருக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் சாலைகளில் பொதுமக்கள் நடமாடக்கூடாது என காவல் துறையினர் எச்சரித்து வருகின்றனர்.

தருமபுரி மாவட்டத்திலும் ஊரடங்கு உத்தரவு கடுமையாக்கப்பட்டுள்ளது. அப்பகுதியைச் சுற்றிலும் தடுப்பு அமைக்கபட்டு வெளியாட்கள் உள்ளே செல்லாமலும், அங்கு இருப்பவர்கள் வெளியே செல்லாமலும் காவல் துறையினர் தொடர்ந்து காண்காணித்து வருகின்றனர்.

கூட்டம் கூட்டமாக சுற்றித் திரியும் பொதுமக்கள்

விடுமுறை நாட்களில் பொதுமக்கள் அதிகம் வெளியே வரக்கூடும் என்பதால், பொதுமக்கள் தங்கள் பகுதியை விட்டு வெளியே வராமல் இருக்க காவல் துறையினர் நான்கு ரோடு. அரசு மருத்துவக் கல்லுரி மருத்துவமனை செல்லும் சாலை, பிடமனேரி, குமாரசாமிப்பேட்டை உள்ளிட்ட முக்கிய சாலைகளில் தடுப்பு அமைக்கப்பட்டு பொதுமக்களை தடுத்து நிறுத்துகின்றனர்.

இந்நிலையில், காவல் துறையினரின் கண்காணிப்பையும் மீறி இருசக்கர வாகனங்களில் பொதுமக்கள் சுற்றி திரிகின்றனர். மளிகை பொருள்கள், காய்கறிகள் வாங்க ஆங்காங்கே கூட்டம் கூட்டமாக சமூக இடைவெளியே இல்லாமல் இருப்பது அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது

மேலும் சாலைகளில் சுற்றித் திரியும் நூற்றுக்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனங்களை காவல் துறையினர் பறிமுதல் செய்து வள்ளலார் மைதானத்தில் வரிசையாக நிறுத்தி வைத்துள்ளனர்.

தருமபுரி நகர் பகுதிகளில் பொதுமக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த தொடர்ந்து நூற்றுக்கும் மேற்பட்ட காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு தேவையில்லாமல் சுற்றி திரிபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து வாகனங்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.

இதையும் படிங்க: 11 ஆண்டுகளுக்கு பிறகு கரோனாவால் ட்ரெண்டான கரண் பட பாடல்!

ABOUT THE AUTHOR

...view details