தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

புத்தாண்டு கொண்டாட்டம்: ஒகேனக்கல்லுக்கு படையெடுத்த சுற்றுலா பயணிகள்! - Tourists Hogenakkal

தருமபுரி: பள்ளிகள் அரையாண்டு விடுமுறை, ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி 50 ஆயிரத்துக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் ஒகேனக்கல்லில் குவிந்தனர்.

hoganakkal
hoganakkal

By

Published : Jan 2, 2020, 8:06 AM IST

'தென்னகத்தின் நயாகரா' என்றழைக்கப்படும் ஒகேனக்கல் நீா்வீழ்ச்சி தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே அமைந்துள்ளது. அருவியில் குளிப்பது, பரிசல் பயணம், எண்ணெய் மசாஜ் போன்றவை ஒகேனக்கல்லின் சிறப்பம்சமாகும்.

புதன்கிழமை அன்று ஆங்கில புத்தாண்டை தங்கள் குடும்பத்துடன் கொண்டாட ஏராளமான சுற்றுலாப் பயணிகள் ஒகேனக்கல்லில் குவிந்தனா். சுற்றுலாப் பயணிகளின் வருகையால் வாகனங்கள் ஒரு கிலோ மீட்டர் தொலைவிற்கு முன்பே நிறுத்தப்பட்டன.

பரிசலில் பயணம் மேற்கொண்டும், எண்ணெய் மசாஜ் செய்தும், மெயின் அருவியில் குளித்தும் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ந்தனர். ஒகேனக்கல்லின் மற்றொரு சிறப்பான மீன் உணவுகளையும் சுற்றுலா பயணிகள் சுவைத்து மகிழ்ச்சி அடைந்தனர்.

ஆர்ப்பரிக்கும் ஒகேனக்கல் நீர்வீழ்ச்சி

பள்ளிகள் அரையாண்டு விடுமுறை, ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம் காரணமாக 50 ஆயிரத்துக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் ஒரே நாளில் குவிந்தனர்.

தமிழ்நாடு மட்டுமல்லாது கர்நாடகா, ஆந்திரா போன்ற பிற மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகை தந்திருந்தனர்.

இதையும் படிங்க:2020 புத்தாண்டே வருக... வருக...! - வானை வண்ணமயமாக்கிய வாணவேடிக்கைகள்

ABOUT THE AUTHOR

...view details