தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த ஒகேனக்கல் சாலையில் முனியப்பன் கோயில் உள்ளது. இக்கோயிலில் நேற்று (ஏப்.22) இரவு அடையாளம் தெரியாத நபர்கள் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளனர். தீயில் சாமி சிலை எரிவது போன்ற வீடியோவும் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், காலையில் கிராம மக்கள் வந்து பார்த்தபோது சிலை எரிந்த நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர், இச்சம்பவம் குறித்து அப்பகுதி மக்கள் பென்னாகரம் காவல் நிலையத்தில் புகாரளித்தனர்.