தருமபுரி மாவட்டம் பென்னாகரத்தில் இருந்து இன்று காலை விக்கிரவாண்டியின் தேர்தல் பணிக்காக திருவண்ணாமலை வழியாக வேட்டவலம் சாலையில் திமுக எம்எல்ஏ இன்பசேகரன் தனது காரில் பயணம் செய்தார். அப்போது ராஜந்தாங்கல் கிராமம் அருகே சென்றபோது எதிரே வந்த இருசக்கர வாகனத்தில் எம்எல்ஏ இன்பசேகரன் கார் மோதி எதிர்பாராதவிதமாக விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில், இன்பசேகரனின் தாடை, முகம் ஆகிய இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனையடுத்து உடனடியாக அவர் திருவண்ணாமலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.