தருமபுரி மாவட்டம் பென்னாகரத்தில் சென்ற வாரம் நடைபெற்ற ஒரு திருமண நிகழ்ச்சியில், கலந்துகொண்ட ஆறு பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
இதனையடுத்து, பென்னாகரம் முல்லுவாடி பகுதி தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு, அப்பகுதி முழுமையும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. திருமணத்தில் கலந்து கொண்டவர்கள், நோய்த்தொற்று பாதிக்கப்பட்டவருடன் தொடர்பிலிருந்தவர்கள் என 30 பேர் செட்டிக்கரை பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்ட கரோனா சிகிச்சை மையத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
பென்னாகரம் நகர்ப் பகுதியில் கரோனா தாக்கம் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, அனைத்து வணிகர்கள் சங்கம் சார்பில் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாளை (ஜூலை 5) முதல் ஜூலை 12ஆம் தேதி வரை வணிக நிறுவனங்கள், சிறு கடைகள் என அனைத்தையும் மூடி, முழு ஊரடங்கை கடைப்பிடிக்க உள்ளனர்.
கரோனா எதிரொலி: பென்னாகரம் பகுதியில் முழு ஊரடங்கு - பென்னாகரம் முழு ஊரடங்கு
தருமபுரி: பென்னாகரம் நகர்ப் பகுதியில் ஆறு பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டதையடுத்து, பென்னாகரத்தில் நாளை ( ஜூலை 5) முதல் ஒரு வாரத்திற்கு முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படுகிறது.
முழு ஊரடங்கு உத்தரவு